இணையதளங்களில் உள்ள விடயங்களையும் தாண்டி அதன் வடிவமைப்பு சில நேரங்களில் மனதில் நின்றுவிடுகிறது, ‘Google’ இப்படித்தான் இருக்கும், ‘Yahoo’ இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் அதன் கட்டமைப்பைக்கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பதிந்துவிடுகிறது, அதற்க்கேற்றாற்போல் இணையதளங்களும் தொடர்ந்து நவீனமாக்கப்பட்டு வருகின்றது, சில வர்த்தக இணையதளங்களை மெருகூட்ட அனுதினமும் பலர் அடங்கிய குழு பின்னணியில் உழைத்துக்கொண்டிருக்கிறது, jQuery, joomla, html5, இன்னும் பிற நிரலிகள் தொடர்ந்து நமது இணைய உலாவும் அனுபவத்தை வேறு தளத்தை நோக்கி இட்டுச்செல்ல வழிவகை செய்கின்றன, அப்படி வடிவமைப்பில் அதிசயிக்க வைக்கும் 10 இணையதளங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்,
1. Wonderwall
பெயருக்கேற்ற வகையில் அதிசயிக்க வைக்கும் சுவர், காற்றில் ஆடும் ஒரு துணியைப் போல் அசையும் வலைப்பக்கத்தில் உங்கள் மவுஸைக் கொண்டு செல்லும்போது கட்டங்களின் முப்பரிமான அசைவுகளும் அதற்கேற்ற ஓசையும் உங்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும்,
2. Jimcarry
புகழ் பெற்ற வட அமெரிக்க நடிகர் ஜிம் கேரியின் இணையதளம், ரொம்பவும்
மெனக்கட்டு வடிவமைத்தவரை சீரிய முறையில் வேலை வாங்கியிருக்கிறார், அவர்
எப்படிப்பட்ட நகைச்சுவை நடிகர் என்பதை இந்த தளத்தைப் பார்த்தாலே புரிந்துகொள்ளும்
அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, ( “இளைய தளபதி இதே போன்று ஒரு இணையதளம் ஆரம்பித்து ஒபெனிங்ல் ஒரு நன்றாக இருக்கும் ஷட்டர் கதவில் வெல்டிங் வைத்து
வெளியேறி கூலாக Welcome to my website என்று சொன்னால் எப்படியிருக்கும்” என்று
என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை)
3. Phatterism
இது luis santi jr என்பவரால் வடிவமைக்கப்பட்ட அட்டகாசமான இணையதளம்,
இதில் உலாவுபவருக்கு அவருடன் நேரில் பேசுவது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும்
தளம், நமது பர்சனல் தளமும் இதே போன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று நிச்சயம்
உங்களைக் கேட்க வைக்கும்.
Harry potter படத்தில் வரும் பேசும் புத்தகங்களைப்போல், உங்களுடன் பேசும் டைரியை இந்த தளத்தில் காணலாம், உங்கள் கேள்விக்கு பதிலும், உங்கள் பதிலை வைத்து அடுத்த கேள்வியும் கேட்கும் இந்த அதிசய டைரியை பார்க்கத் தவறாதீர்கள்.
5. Silenzio
மெல்லிய வெளிச்சமுள்ள இருட்டறைக்குள் ‘ டார்ச்’ அடித்து அங்கே சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஹாலிவுட் பட டிவீடி க்களை பார்த்தால் ஏற்படும் பிரமிப்பை இந்தத் தளம் ஏற்படுத்துகிறது, சிதறிச்சேரும் திரைப்படங்களை விட இந்தத் தளத்தின் வடிவைப்பு நம்மை வாய்பிளக்க வைக்கிறது.
இருவரால் இழுத்துப்பிடிக்கப்பட்ட கயிற்றில் ஆடும் பெண்ணை உங்கள் மௌஸ் ஐ நகர்த்துவதன் மூலம் விருப்பப்படி ஆட்டுவிக்கலாம்,
7. Ball pool
இந்த தளத்தில் நீங்கள் Mouse ஐ அழுத்த அழுத்த பந்துகள் கொட்டிக் கொண்டே இருக்கும், இரண்டு முறை தொடர்ந்து அழுத்தினால் வேறு வண்ணத்தில் பந்துகள் உதிரும், இப்படிக் குவிந்த பந்துகளை உங்கள் Mouse ஐ நகர்த்துவதன் மூலம் கலைத்து விளையாடலாம். இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் பந்துகளின் அசைவுகள் மிகத் தத்ரூபமாக வரையறுக்கப் பட்டுள்ளது.
உங்கள் Mouse ஐ லேசாக அசைத்தால் உடைந்து கொட்டும் Google gravity
தளத்தை காணத்தவறாதீர்கள்.
9. Crazy rabbit
இந்தப் பூனைக்கு உங்கள் Cursor ன் மீதுதான் எத்தனை கோபம், முடிந்தால் அதனருகில் Cursor ஐக் கொண்டு செல்லுங்கள், பிறகு தெரியும்.
10. இந்தப் பத்தாவது தளத்தை உங்கள் மறுமொழியில் இட்டுச் செல்லுங்கள்,
உங்களை அதிசயிக்க வைத்த இணைய தளத்தைக் கட்டாயம் பகிருங்கள்,
டிஸ்கி: உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் Facebook,
Twitter, ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமாகவோ,
அல்லது Indli போன்ற திரட்டிகளில் ஓட்டளிப்பதாலோ மேலும் பல
நண்பர்களும் வாசிக்க வழிவகை செய்யலாம்.

super
ReplyDeletenanraaka irukkirathu....vaalththukkal
ReplyDeletewonderful. i like this post.
ReplyDeleteonline museum:
ReplyDeletehttp://www.mnh.si.edu/panoramas/flashVersion/index.html
from:
http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_23.html
// Anonymous Anonymous said...
ReplyDeletesuper//
Thankyou for your visit and encouraging comments :)
// மதுரை சரவணன் said...
ReplyDeletenanraaka irukkirathu....vaalththukkal //
உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தோழர், உங்கள் வாழ்த்துக்களால் நமது வலைப்பூ இன்னும் வளரும் என்று நம்புகிறேன், எனக்கும் மதுரைதான், பிழைப்புக்காக தற்பொழுது சௌதியில் இருக்கிறேன்.
// பலே பிரபு said...
ReplyDeleteonline museum:
http://www.mnh.si.edu/panoramas/flashVersion/index.html
from:
http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_23.html //
உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தோழர், உங்கள் பெயர் மட்டுமல்ல நீங்கள் பகிர்ந்த பத்தாவது இணையதளமும் ‘ பலே’ தான்.,
google gravity is good. thank you.
ReplyDelete// rahulzதமிழ் said...
ReplyDeletegoogle gravity is good. thank you. //
Thankyou for your visit and encouraging comments rahulzதமிழ் :)
Really nice collection... Thanks for sharing...
ReplyDelete//Gangaram said...
ReplyDeleteReally nice collection... Thanks for sharing...//
Thankyou for your visit and encouraging comments gangaram :)
பத்தாவது தளம் மிக அருமை
ReplyDelete