Wednesday, April 20, 2011

எமது பதிவை, களவாடி வெளியிட்ட நண்பருக்கு ஒரு பகிரங்க கடிதம்

நண்பர் ஞானமுத்து அவர்களுக்கு வணக்கங்கள், 

                          ணையத்தில் பதிவுத்திருட்டை கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது எந்த அளவிற்கு மன உளைச்சலைத்தரும் என்பதை இன்று உணர்ந்தேன், ஆம், ஒவ்வொரு வலைப்பதிவரும் தன் நிலையில் ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களது பொன்னான நேரத்தையும், சிந்தயையும் செலவிடுகிறார்கள், ஆனால் உங்களைப்போன்ற சிலர் அதை மிகவும் எளிதாக காப்பி அடித்து வெளியிட்டு தினமும் கொஞ்சம் அதிகமாக ஹிட்ஸ் கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறீர்கள்,
இதற்க்காக ஒவ்வொரு பதிவிற்கும் காப்பிரைட் வாங்கி வெளியிடவேண்டிய அவசியமில்லை, சமகால பதிவுலக நாகரிகத்தை ஒவ்வொரு பதிவரும் கடைபிடித்தாலே போதும் (அதிலும் முக்கியமாக உங்களைப்போன்றவர்கள்), மேலும், அந்த பதிவை இன்ட்லியில் வெளியிட்டால் மாட்டிவிடுவோமோ  என்று தமிழ்வெளியில் வெளியிட்டீர்கள், பாவம், கட்டற்ற இணையத்தில் எதையும் மறைக்க முடியாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், நான் 2009 ஆம் ஆண்டு இந்த வலைப்பூவை தொடங்கி சில கசப்பான அனுபவங்களால் தொடரமுடியாமல் விட்டுவிட்டேன், மீண்டும் தொடங்கி ஒரு வாரம்கூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு சம்பவம், அதுவும் உங்களால், நீங்கள் உண்மையிலேயே இந்த பதிவு மற்றவர்களுக்கு பயன்படும் என்று கருதியிருந்தால் இன்ட்லியில் ஒரு ஓட்டு போட்டிருக்கலாம், அல்லது உங்கள் இணையதளத்திலிருந்து எனது பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கலாம், ஆனால் இரண்டையும் செய்யாமல் பதிவின் தலைப்பை மட்டும் மாற்றி அடுத்த நாளே வெளியிட்டு உங்கள் சுயநலத்தை காட்டிவிட்டீரே! இது உங்களுக்கே நியாயமாக பட்டால் சரி, உங்களைப்போன்ற ஒரு மூத்த பதிவர் என்னைப்போன்றவர்களின் பதிவை எடுத்து போடுவது ஒருபுறம் எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் நினைக்கத்தோன்றுகிறது, இது அநியாயமோ, அங்கீகாரமோ, இறுதியாக ஒன்றை மட்டும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,"தயவு செய்து மற்றவர் சிந்தையை திருடி, பிறருக்கு பந்தி வைக்காதீர்கள்".

தோழமையுடன்.,
இரா.பெ.செந்திலன்.,

டிஸ்கி:  இதைப்படிக்கும் உங்களுக்காக 18/ 04/ 2011 அன்று  வெளியிட்ட எமது  பதிவைப்பார்க்க  இங்கே க்ளிக்கவும்,

                 அதைக்காப்பியடித்து நண்பர்
19/ 04/ 2011 அன்று வெளியிட்ட பதிவைப்பார்க்க இங்கே க்ளிக்கவும்,

                  மறக்காமல் நீங்கள் சொல்ல நினைப்பதை கருத்திடவும்.,



Share/Bookmark

0 கருத்துக்கள்:

Post a Comment