
வந்தேமாதரத்தில் வெளிவந்த Torrent பற்றிய பதிவைக்காண இந்த சுட்டியில் செல்லவும்,
இந்தப் பதிவில் நாம் தரவிறக்கும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம், Bit torrent Protocol ஐ அடிப்படையாக வைத்தே பதிவிட்டுள்ளேன், இது U Torrent க்கும் பொருந்தலாம், ஆனால் என் அனுபவத்தில் U Torrent ஐ விட Bit torrent சிறந்ததாய்த் தோன்றுகிறது..
Bit torrent தரவிறக்க,
- Open bit torrent -> Options -> Preferences -> Bandwidth அல்லது, நீங்கள் ஷார்ட்கட் விரும்பி என்றால் Open bit torrent -> Ctrl+P -> B, அழுத்தினால் பின்வரும் Menu வைக்காணலாம், அதில் Maximum Download Rate, 0 (Zero) வில் இருக்கிறதா என்று சோதனை செய்து ‘OK’ செய்யவும்.
- பிறகு நீங்கள் Bit torrent ல் Active செய்துள்ள Torrent களில் எந்த torrent வேகமாக இறங்க வேண்டுமோ அதில் Right Click செய்து பின்வரும் படத்தில் காட்டியபடி open ஆகும் மெனுவில் Bandwidth Allocation ஐ High கொடுப்பதன் மூலம் உங்கள் Torrent ன் வேகம் அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம்.
Bit torrent இணையத்தைப் பெருமளவு பயன்படுத்திக் கொள்வதால் Browser ல் இணைய வேகம் சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது, குறைவதாய் உங்களுக்குத் தோன்றினால் வேறு தேவைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்தாத போது இந்த முறையில் தரவிறக்குங்கள்
பகலிலும் மற்றும் இரவிலும் பயன்படுத்தாத போதும் Bit torrent க்காக கணினியை ‘off’ செய்யாமல் உறங்கும் unlimitad offer ஐ unlimited ஆகப் பயன்படுத்தும் பேர்வழி நீங்கள் என்றால் இந்த முறை உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும், 700Mb உள்ள ஒரு DVD – Rip திரைப்படத்தினை போதுமான அளவு seed மற்றும் peer இருக்கும் பட்ச்சத்தில் இந்த முறையில் சில நிமிடங்களில் தரவிறக்கி விடலாம், ( 700Mb முடியும் வரை தரவேற்றுவதால் நீங்கள் மற்றொருவர் தரவிறக்கவும் வழிவகை செய்யலாம் )
நன்றி: விக்கிப்பீடியா (Torrentன் இயங்கு நிலை புகைப்படம்)
டிஸ்கி: உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter,
ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமாகவோ,
அல்லது Indli போன்ற திரட்டிகளில் ஓட்டளிப்பதாலோ மேலும்
பல நண்பர்களும் வாசிக்க வழிவகை செய்யலாம்.

நன்றி. நானும் அன்லிமிடெட் பேர்வழி தான். ஒரு நாளைக்கு குறைந்தது 3 படங்களாவது எடுத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் யுடொரண்ட் போடுங்க வேகம் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகமெண்ட் செட்டிங்க்ஸில் புல் பேஜை மாற்றுங்கள். வருபவர்கள் கமெண்டோடு போய்விட வாய்ப்புள்ளது.
நான்கூட யுடொரண்ட்தான் பயன்படுத்தி வருகிறேன் நண்பா..
ReplyDeleteபயனுள்ள இடுகை முயற்சிக்கிறேன்.
Bit torrent தரவிறக்க,
ReplyDeleteசுட்டி ப்ளாக்கர் பக்கத்துக்கு அழைத்துச்செல்கிறதே நண்பா.
nice
ReplyDelete// பொன்மலர் said...
ReplyDeleteநன்றி. நானும் அன்லிமிடெட் பேர்வழி தான். ஒரு நாளைக்கு குறைந்தது 3 படங்களாவது எடுத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் யுடொரண்ட் போடுங்க வேகம் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி
கமெண்ட் செட்டிங்க்ஸில் புல் பேஜை மாற்றுங்கள். வருபவர்கள் கமெண்டோடு போய்விட வாய்ப்புள்ளது.//
சிறந்த பரிந்துரை பொன்மலர், தற்பொழுது நீங்கள் பதிவின் கீழேயே மறுமொழியும் இடுமாறு செய்துவிட்டேன், மிக்க நன்றி.
// முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநான்கூட யுடொரண்ட்தான் பயன்படுத்தி வருகிறேன் நண்பா..
பயனுள்ள இடுகை முயற்சிக்கிறேன்.//
முயற்சித்துப் பாருங்கள் தோழர், தொழிநுட்ப அமுதத்தின் கடைசிச் சொட்டு வரை பருகித் தீர்ப்போம், நன்றி.
// Anonymous said...
ReplyDeletenice //
உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
// முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteBit torrent தரவிறக்க,
சுட்டி ப்ளாக்கர் பக்கத்துக்கு அழைத்துச்செல்கிறதே நண்பா.//
மன்னிக்கவும், இப்பொழுது சரிசெய்துவிட்டேன் தோழர், Backlinks Settings ஐ மாற்றியதால் இந்த தவறு நேரிட்டிருக்கலாம், வரும் காலங்களில் இப்படி நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.