Monday, April 18, 2011

எல்லா வகையான கன்வெர்டிங்ம் ஒரே மென்பொருளில் செய்யலாம்

    இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள், மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன, ஆனால், அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் (format) பார்மட்டில் கிடைப்பதில்லை, அவ்வாறு பார்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது ஒரு மாத வெள்ளோட்ட மென்பொருளாகவோ  அல்லது சில வசதிகள் அற்றதாகவோ உங்களுக்கு கெட்ட காலம் என்றால் மால்வேராகவோ இருக்கக்கூடும், இந்த குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ள சிறந்த மென்பொருளான Format factory 2.60 வைப்பற்றி இந்த பதிவில் காண்போம்..


1.  இது ஒரு இலவச மென்பொருளாகும், (இதன் செயலாற்றல் உங்களைக்கவர்ந்தால் பிறகு சில டாலர்கள் நன்கொடையாக தரலாம்) இதை இணையத்தில் தரவிறக்கி நிறுவும்போது உங்களிடம் ask.com ன் கருவிப்பட்டையை நிறுவ கேள்வி கேட்கப்படும், தேவையென்றால் நிறுவிக்கொள்ளலாம் இல்லையென்றால் குறியீட்டை நீக்கிவிட்டு மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.
 
2.  இந்த ஒரே மென்பொருளில் எந்த வீடியோவையும் MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV, MKV, MPG, VOB, MOV, FLV, SWF பார்மட்களாகவும், எந்த ஆடியோவையும் MP3, WMA, FLAC, AAC, MMF, AMR, M4A, M4R, OGG, MP2, WAV, WavPack பார்மட்களாகவும், புகைப்படங்களை JPG, PNG, ICO, BMP, GIF, TIF, PCX, TGA பார்மட்களாகவும் மாற்றிக்கொள்ளலாம், மேலும் இதில் உங்கள் மொபைல் போனிற்க்காகவும் வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.
  
3. மற்றும் DVD Ripping  எனப்படும் DVD to CD வசதி, Music CD யிலிருந்து Audio File ஆக மாற்றும் வசதி, DVD/ CD யை ISO/ CSO ஆக மாற்றும் வசதி, மேலும்  ISO <-> CSO வசதியும் உள்ளது.

4.  மேலும் இதில் உள்ள Advanced Option மூலமாக Video joiner, Audio Joiner, மற்றும் Mux எனப்படும் ஒளியையும், ஒலியையும் ஒன்றிணைக்க உதவும் வசதிகள்,மற்றும் Media File Info வசதிகளும் உள்ளது.
 
5. இதன் மூலம் RMVB, H264, DIVX, XVID, WMV2 ஆகிய Encodingகளை துல்லியமாகவும் அதிவிரைவாகவும் Encoding செய்யலாம்.

6. இதில் Convert செய்யப்போகும் வீடியோவின் உள்ளார்ந்த இயல்புகளையும் நமக்குத்தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் எண்ணற்ற பைல்களை Convert செய்யலாம், Converting முடிந்ததும் கணிப்பொறியை Auto Shutdown செய்யும் வசதியும் உள்ளது.

7. இத்தனை வசதிகளுடன் இந்த மென்பொருள் வருவதால் C Net கூற்றின்படி இதன் வகையில் உள்ள இலவச Format Coverting மென்பொருட்களில் தற்பொழுது இதுவே முதல் இடத்தில் உள்ளது.


Format Factory 2.60 தரவிறக்க இந்த சுட்டியில் செல்லவும்,


டிஸ்கி: சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சப்பாத்தியை கூட ப்ளே செய்யும் ஒனிடாவிலும் ஓடாத ( அந்த அளவிற்கு கீறல்கள் இருந்தது ), ஒரு dvd யை என் மேலாளர் கொண்டுவந்து இதில் உள்ள வீடியோவை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற சவாலான பணியை என்னிடம் ஒப்படைத்தவுடன் நானும் அதற்க்காக இரவு பகலாக தேடி ( 3 நாள் செம ஜாலி, நோ ஆபிஸ் வொர்க் ) ஒவ்வொரு மென்பொருளாக முயற்சித்து, மால்வேர்களுக்கு இரையாகி கடைசியில் சிக்கியதே இந்த மென்பொருள்.


Share/Bookmark

1 comment:

  1. முயற்சி செய்து பார்ப்போம்...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete