
1. முதலில் www.tuitalk.com சென்று ஒரு அடிப்படையான கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் பெயராக இருக்கும், நீங்கள் விரும்பினால் உங்கள் படிப்பு, பணி, ஆர்வமான துறைகள் என்று மேலதிக தகவல்களையும் தந்து உங்களுக்கான சரியான விளம்பரத்தை தருவதற்கு அவர்களுக்கு உதவலாம், ஆனால் இது கட்டாயமல்ல.
2. tuitalker மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
3. பிறகு உங்கள் கணக்கை இயக்கவும், கடவுச்சொல் நிறுவவும், ஒரு சுட்டி மின்னஞ்சலாக அனுப்பப்படும், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த மின்னஞ்சல் எந்த நேரத்திலும் வரலாம், சிலருக்கு மூன்று மணிநேரம் கழித்து கூட வந்துள்ளது, எனவே மின்னஞ்சல் வரவில்லையே என்று மீண்டும் மீண்டும் கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
4. கடவுச்சொல்லை நிறுவியதும் உங்கள் பயனர் பெயர், மற்றும் நீங்கள் தந்த கடவுச்சொல் ஆகியவற்றை tuitalker மென்பொருளில் கொடுத்து உள்நுழையவும், முதலில் நுழையும்போது Remember me மற்றும் Remember my password ஆகிய இரண்டையும் தேர்வுசெய்துவிட்டு நுழைந்தால் மறுமுறை மிக இலகுவாக நுழைய வசதியாய் இருக்கும்.
5. நுழைந்ததும் அழைக்கும் நாட்டைத்தேர்வுசெய்து அழைக்கப்போகும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணைக்கொடுத்து call என்கிற பொத்தானை அழுத்தவும், இப்பொழுது உங்களுக்கு 30 வினாடிகள் வரை ஓடும் விளம்பரம் காட்டப்படும், விளம்பரம் முடிந்ததும் தானாகவே நீங்கள் அழைத்த எண்ணிற்கு அழைப்பு செல்லும், இணைய வேகம் குறிப்பிடும்படி இருக்குமேயானால் அழைப்பும் துல்லியமாக இருக்கும்.
6. மேலும் இதில் தொலைபேசி எண்களை பதிந்துவைத்துக்கொள்ளும் contacts வசதியும், பேசிய அழைப்பு விவரங்களை பெற call History வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
7. இவ்வாறு இந்தியாவிற்கு தினமும் முறையே 2 + 2 + 2 என ஆறு அழைப்புக்களை இலவசமாக செய்யலாம், இது இந்தியாவிற்கு மட்டும்தான். இதே சிங்கப்பூருக்கு நீங்கள் அழைத்தால் முறையே 6 + 6 + 6 என தினமும் பதினெட்டு அழைப்புக்கள் செய்யலாம்.மேலும் மற்ற நாடுகளுக்கு தினமும் எத்தனை அழைப்புக்கள் செய்யலாம் என்று அறிய இங்கே சொடுக்கவும்,
வளைகுடாவில் இருப்பவர்கள் தாயகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா ஆகிய இன்னபிற நாடுகளில் இருக்கும் தங்களது உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாக தொலைபேசிக்கு பேச இது ஒரு சிறந்த வசதி என்பதில் எந்த ஐயமுமில்லை, உங்களுக்கு இதை பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் மேலதிக தகவல்களுக்கு பின்னூட்டத்தில் பதிவிடவும், பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்தையும் மறக்காமல் பின்னூட்டமிடவும்.
டிஸ்கி: இலவசத்தை நாம் எந்த ரூபத்திலும், எப்பொழுதும் வரவேற்பவர்கள் என்பது அறிந்ததே, இந்த பயன்பாடு இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அழைக்க தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள், யாரேனும் அழைக்க இயன்றால் தெரிவிக்கவும்.

good and call change ur ip address
ReplyDeletethen call (hotpotsel)and call india to other country
மிக்க நன்றி சகோதரம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவது
பதிவை திருடிய சுயநலக்காரி..
@ // good and call change ur ip address
ReplyDeletethen call (hotpotsel)and call india to other country//
Thankyou for your visit friend.,
@ ம.தி.சுதா
ReplyDeleteசகோதரரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
.மேலும் மற்ற நாடுகளுக்கு தினமும் எத்தனை அழைப்புக்கள் செய்யலாம் என்று அறிய இங்கே சொடுக்கவும்,
ReplyDeleteNot Found
Error 404...
@ Vijayakumar said...
ReplyDelete//மேலும் மற்ற நாடுகளுக்கு தினமும் எத்தனை அழைப்புக்கள் செய்யலாம் என்று அறிய இங்கே சொடுக்கவும்,
Not Found
Error 404...//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, சுட்டியை சோதனை செய்தபிறகே பதிவில் இணைத்தேன், தற்பொழுதும் சுட்டி சரியாகவே இயங்குகிறது, எதற்கும் உங்கள் இணைப்பை சரிசெய்து மீண்டும் முயற்சிக்கவும்,
I do agree with the above persons. I am also not able to connect the link
ReplyDelete