Monday, April 25, 2011

பிரிந்துபோன மனைவியின் மரணம்

   பூமியில் ஓர் உயிரினமாய்த் தோன்றி ஆறாவது அறிவால் இன்று பூமிப்பந்தையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் மனித இனத்தால் மரணம் என்னும் இயற்கை நியதியை இன்னும் விஞ்சமுடியவில்லை, மானுட வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை மரணம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு முறை ஊருக்குச்செல்லும்போதும் சிலர் மரணித்த செய்தி கேட்டு அவர்களுடனான சில நினைவுகள் கண்முன்னே வந்துபோகும், இன்று மரணத்தைப்பற்றிய எண்ணங்கள் மேலோங்க எனது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மனைவி மரணித்த நிகழ்வே காரணம், அதைப்பற்றி உங்களுடன் பகிரவே இந்த பதிவு.

Share/Bookmark

Saturday, April 23, 2011

மழைக்கால நினைவுகள்


          காலநிலை மாற்ற அற்புதங்களில் மழைக்கே முதலிடம், சில நிகழ்வுகளில் மழையும் ஒரு கதாப்பாத்திரமாகவே ஒன்றிவிடுகிறது, சிறு வயதில் மழை வரும்போதெல்லாம் எனக்குள் பல கேள்விகள் எழும், அது எங்கிருந்து வருகிறது, யார் மேலேயிருந்து இவ்வளவு நீரை ஊற்றுகிறார்கள் என்று மனதுக்குள் பேசிக்கொண்டே பொழியும் மழையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன், மழையுடன் தோன்றும் இடி மின்னலில் நடுங்கிப்போவேன், வீட்டின் முன்புறம் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை அதட்டி அழைக்கும் பாட்டியிடம் இடியும் மின்னலும்

Share/Bookmark

Wednesday, April 20, 2011

எமது பதிவை, களவாடி வெளியிட்ட நண்பருக்கு ஒரு பகிரங்க கடிதம்

நண்பர் ஞானமுத்து அவர்களுக்கு வணக்கங்கள், 

                          ணையத்தில் பதிவுத்திருட்டை கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது எந்த அளவிற்கு மன உளைச்சலைத்தரும் என்பதை இன்று உணர்ந்தேன், ஆம், ஒவ்வொரு வலைப்பதிவரும் தன் நிலையில் ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களது பொன்னான நேரத்தையும், சிந்தயையும் செலவிடுகிறார்கள், ஆனால் உங்களைப்போன்ற சிலர் அதை மிகவும் எளிதாக காப்பி அடித்து வெளியிட்டு தினமும் கொஞ்சம் அதிகமாக ஹிட்ஸ் கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறீர்கள்,

Share/Bookmark

Monday, April 18, 2011

எல்லா வகையான கன்வெர்டிங்ம் ஒரே மென்பொருளில் செய்யலாம்

    இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள், மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன, ஆனால், அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் (format) பார்மட்டில் கிடைப்பதில்லை, அவ்வாறு பார்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது ஒரு மாத வெள்ளோட்ட மென்பொருளாகவோ  அல்லது சில வசதிகள் அற்றதாகவோ உங்களுக்கு கெட்ட காலம் என்றால் மால்வேராகவோ இருக்கக்கூடும், இந்த குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ள சிறந்த மென்பொருளான Format factory 2.60 வைப்பற்றி இந்த பதிவில் காண்போம்..

Share/Bookmark

Friday, April 15, 2011

இணையம் மூலம் தினமும் இலவச சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்

                                                 
ன்று வெளிநாடுகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் கால் எனப்படும் VOIP சேவையை அறிந்திருப்பீர்கள், அதுவும் இந்தியாவிற்கு அழைப்புக்கட்டணம் அதிகமாக வசூலிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த சேவை இன்றியமயாதது,  அந்த வகையில் உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவின் எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும் tuitalker என்னும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த இடுகையில் பார்ப்போம்.

Share/Bookmark