Monday, May 2, 2011

உங்கள் வலைப்பூவிற்கான Link Button ஐ எளிதாக உருவாக்கலாம்

      பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு வலைப்பூவிற்கு முக்கியமானதாகும், நமது வலைப்பூவின் தர வரிசையும் அதைக்கொண்டே அளவிடப்படுகிறது, உங்கள்      வலைப்பூவின் பார்வையாளர்களை அதிகமாக்கவும் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் மூலமாக புதிய வாசகர்கள் கிடைக்கவும் Link button மிகச்சிறந்த கருவியாக இருக்கும், இதன் மூலம் வலைப்பூ மட்டுமில்லாது நீங்கள் விரும்பும் எந்த Link யும் ஒரு புகைப்படமாகவோ அல்லது எழுத்தாகவோ தெரியுமாறு செய்யலாம், சில விளம்பரங்களைக்கூட புகைப்படத்தின் பின்னணியில் சுட்டியை வைத்து (Backlink) வெளியிடலாம், இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்.,


          Link Button (புகைப்படத்துடன்) நிறுவ:
       
   முதலில் எந்த புகைப்படம் அல்லது link button ற்கு இணைப்பு கொடுக்கப் போகிறீர்களோ அதை Photobucket, Imageshack, அல்லது நீங்கள் விரும்பும் ஏதேனுமொறு Image Host Website ல் தரவேற்றி அதன் direct link ஐப் பெற்றுக்கொள்ளவும். ( நீங்கள் link button உருவாக்க www.cooltext.com உதவலாம், அல்லது Googleல் Button Generator என்று டைப் செய்தால் மேலதிக வசதிகளைப் பெறலாம்)


நிரல்:

<a href="http://rpsenthilan.blogspot.com"><img src="http://img560.imageshack.us/img560/2843/cooltext516623973.png" alt="இணையத்திலிருந்து உங்கள் இதயத்தைத் தேடி" /></a>


   மேற்க்கண்ட நிரல் எனது வலைப்பூவிற்கான Link Button, இதை நீங்கள் விரும்பும்படி மாற்ற எனது வலைப்பூ முகவரிக்கு (http://rpsenthilan.blogspot.com) பதிலாக உங்கள் முகவரியையும், எனது புகைப்படத்திற்கு (http://img560.imageshack.us/img560/2843/cooltext516623973.png) பதிலாக நீங்கள் தரவேற்றிய புகைப்படத்தின் நேரடி சுட்டியையும், எனது வலைப்பூ விபரத்திற்கு (இணையத்திலிருந்து உங்கள் இதயத்தைத் தேடி) பதிலாக உங்கள் வலைப்பூவின் விபரத்தையும் அளிக்கவும். இப்படி திருத்தப்பட்ட நிரலை பின்வருமாறு நிறுவ வேண்டும்.


  1. Blogger --> Dashboard --> Design --> Page elements
  2. Add a Gadget --> Edit HTML/ JavaScript = இதில் நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய நிரலை அப்படியே Select all கொடுத்து Copy செய்து, பெட்டியில் Paste செய்யவும், நீங்கள் விரும்பும் தலைப்பைக் கொடுத்துவிட்டு Save செய்யவும், இப்பொழுது உங்கள் வலைப்பூவுக்கான Link button தயார், நிரலை மின்னஞ்சலில் அனுப்பியோ அல்லது வலைப்பூவில் வெளியிட்டோ நண்பர்களையும் உங்கள் Link button ஐ நிறுவ வைக்கலாம்.

எழுத்தால் Link உருவாக்க:
     
இதற்க்கு பின்வரும் இரண்டு நிரல்கள் உங்களுக்கு உதவலாம்.


நிரல் 1:

<p>To link to this blog, copy and paste the code below into your site.</p>
<textarea id="b_2" rows="4" cols="24" style="font-size: 1.1em;" readonly="readonly" onclick="this.select();"><a href="BLOG_URL">BLOG_TITLE</a></textarea>

மேற்க்கண்ட நிரலில் CAPITAL LETTERS ல் உள்ள BLOG_URL மற்றும் BLOG_TITLE ஆகியவற்றில் முறையே உங்கள் வலைப்பூ முகவரியையும் மற்றும் உங்கள் வலைப்பூவின் தலைப்பையும் கொடுக்கவும்.


      எளிதான இந்த நிரலையும் பார்ப்போம்.
நிரல் 2:

<a href="http://rpsenthilan.blogspot.com">இணையத்திலிருந்து உங்கள் இதயத்தைத் தேடி </a>

மேற்க்கண்ட நிரலில் எனது வலைப்பூ முகவரிக்கு (http://rpsenthilan.blogspot.com) பதிலாக உங்கள் முகவரியையும், , எனது வலைப்பூ விபரத்திற்கு (இணையத்திலிருந்து உங்கள் இதயத்தைத் தேடி) பதிலாக உங்கள் வலைப்பூவின் விபரத்தையும் அளிக்கவும், எளிதான முறையில் link தயார்.
  

டிஸ்கி: இந்த விசயத்த பதிவிட்ட புன்னியத்துக்காவது யாராவுது நமக்கு லிங்க் குடுக்குராங்கலான்னு பாப்போம்., 


Share/Bookmark

2 comments:

  1. பயனுள்ள செய்தி நண்பா..
    கருத்துரையில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்களேன்..

    ReplyDelete
  2. முனைவர்.இரா.குணசீலன்
    //பயனுள்ள செய்தி நண்பா..
    கருத்துரையில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்களேன்..//

    உங்கள் கருத்தை ஏற்று அதை எடுத்துவிட்டேன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்.,

    ReplyDelete