Thursday, May 5, 2011

உங்கள் பதிவில் Scrolling Text Boxஐ எளிதாக இணைக்கலாம்


         லைப்பூ வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைக்காக மேலதிக சேவைகளை வழங்கும் பல தளங்களிலிருந்து Gadget களை நிறுவுவதற்கான HTML நிரலியை copy செய்திருப்பீர்கள், அப்பொழுது கவனித்திருக்கிறீர்களா, அவர்கள் அதை ஒரு நகரும் scroll வசதியுடன் கூடிய ஒரு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள், இது எந்த பிழையும் இல்லாமல் மிக எளிதாக நிரலியை Select All செய்து Copy செய்ய உதவும்,
இதேபோல் நமது வலைப்பூவிலும் ஏதேனும் தொழிநுட்பப் பதிவிலோ அல்லது ஏதேனும் HTML நிரலியை வெளியிடும்போது எப்படி Scrolling Text Box ஐ அமைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்.,

1)      முதலில் Post பக்கத்திற்குச் சென்று Edit HTML என்பதை கிளிக் செய்யவும்.
2)      அந்த பக்கத்தில் முன்னரே இருக்கும் நிரலிக்குக் கீழே பின்வரும் நிரலியை Copy செய்து Paste செய்யவும்.


<textarea style="WIDTH: 332px; HEIGHT: 70px" onfocus="this.select();" name="textarea" cols="14">PUT CONTENT HERE</textarea>


பிறகு மீண்டும் Compose ஐ கிளிக் செய்து Post பக்கத்தில் பார்த்தால் பின்வருமாறு Text Box வந்திருக்கும்,


மேற்க்கண்ட நிரலியில் வண்ணமிடப்பட்டுள்ள அளவுகளை மாற்றுவதன் மூலம் தேவையான பெட்டியின் அளவுகளைப் பெறலாம், PUT CONTENT HERE, என்கிற இடத்தில் நீங்கள் வெளியிடப்போகும் நிரலியை வைக்கலாம், அல்லது Composeற்கு வந்து பெட்டியிலும் டைப் செய்யலாம்,

இதே Text Box ஐ வண்ணத்தில் பெற பின்வரும் நிரலியை பயன்படுத்தவும்.

<textarea rows="10" cols="40" style="background:#6699ff;">PUT CONTENT HERE</textarea>


Post பக்கத்தில் பார்த்தால் பின்வருமாறு Text Box வந்திருக்கும்,


இதிலும் வண்ணத்திர்க்கான code ( #6699ff ) ஐ மாற்றுவதன் மூலம் வெவ்வேறு வண்ணங்களில் Text Box ஐ உருவாக்கலாம்.

டிஸ்கி: கட்டம் கட்டிக் கலக்குங்க, சந்தேகம் இருந்தா கேளுங்க.,


Share/Bookmark

2 comments:

  1. // Mahan.Thamesh said...
    NALLA THAGAVAL //

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமேஷ், உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கமே இன்னும் நல்ல தகவல்களைத் தரவேண்டுமென்று தூண்டுகிறது.

    ReplyDelete