
METATAGS உங்கள் வலைப்பூவில் உள்ள விபரங்களை தேடியந்திரங்களுக்கு தெரிவிக்கிறது, இதன் மூலமாக தேடியந்திரங்கள் உங்கள் வலைப்பூவை மிகத் துல்லியமாக பட்டியலிட (Indexing) முடிகிறது, இறுதியாக META TAGS ஐ நிறுவாமல் உங்கள் தளத்தின் SEO.(Search Engine Optimisation) முழுமை பெறாது எனலாம்.
இத்தகைய META TAGS நிறுவும் வழிமுறையை எளிதாக விளக்க இந்தப் பதிவு உதவுமென நம்புகிறேன்.
முதலில் நாம் இரண்டு META TAGS களை Head பகுதியில் இணைக்கப் போகிறோம், முதலில் வலைப்பூவின் விபரத்தையும் (Description), அடுத்து குறிச் சொற்களையும் (Keywords) நிறுவுவோம், புதிய பிளாக்கர்களும் மிக எளிதாக புரிந்துகொள்ளும்படி தகுந்த புகைப்படங்களுடன் விளக்கியுள்ளேன், சந்தேகமிருந்தால் கருத்திடவும்.
வழிமுறை:
பிளாக்கர் கணக்கில் நுழைந்து dashboard-->click the 'DESIGN' button ( பின்வரும் புகைப்படத்தைப் பார்க்கவும் )
Edit HTML கிளிக் செய்யவும். (உங்கள் வலைப்பூவின் HTML நிரலில் மாற்றங்கள் செய்யும்போதும் அல்லது மேலதிக வசதிகளை நிறுவும் போதும் ஏற்கனவே உள்ள நிரலியை முன்னரே தரவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ள மறவாதீர்கள்)
பின்வரும் CODE ஐக் கண்டுபிடிக்கவும்.
அதற்க்கடுத்ததாய் பின்வரும் METATAGS ஐ நிறுவவும்.
மேற்க்கண்ட நிரலில் பின்வரும் வரிகளைத் உங்களுக்காய்த் திருத்திக் கொள்ளுங்கள்:
DESCRIPTION HERE: உங்கள் வலைப்பூவின் விபரம்.
KEYWORDS HERE: உங்கள் வலைப்பூவிற்கான குறிச்சொற்கள். ( ஒன்றிற்கு மேற்ப்பட்ட குறிச்சொற்கள் எழுதுகையில் இடையில் (, )comma and space விட்டு எழுதவும்.
AUTHOR NAME HERE: பதிவாளர் (அ) உங்களது பெயர்.
எடுத்துக்காட்டாக META TAGS ஐ நிறுவிய முன்பும் பின்பும் எனது நிரலியின் தோற்றத்தைக் காணவும்.
முன்பு:
பின்பு:
முடிந்தது, இனி உங்கள் பதிவைப் பொறுத்து METATAGS உதவியால் தேடியந்திரங்களின் மூலமாகவும் கணிசமானோர் வருகை தருவதை stats ல் காணலாம்.
டிஸ்கி: உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter,
ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமாகவோ,
அல்லது Indli போன்ற திரட்டிகளில் ஓட்டளிப்பதாலோ மேலும்
பல நண்பர்களும் வாசிக்க வழிவகை செய்யலாம்.

arumaiyaana thakaval.. nanri. vaalththukkal
ReplyDeletepayanulla thakaval ...
ReplyDeleteஉங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு..
ReplyDelete